சேரன்மாநகர் சிறுவர் விளையாட்டுப் பூங்கா பராமரிப்பில் அலட்சியம்: தனியாருக்கு பதில் மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க மக்கள் கோரிக்கை

மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 3-மாதங்களில் முடிகிறது. அடுத்த முறை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்கும் பணியை எடுத்து நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சேரன்மாநகர் சிறுவர் விளையாட்டுப் பூங்கா பராமரிப்பில் அலட்சியம் காட்டும் தனியார் நிறுவனத்துக்கு பதில் மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. ஏ பி சி என மூன்று பிரிவுகளின் கீழ் 568 வீடுகள் உள்ளன.



கடைசி பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி சார்பில் ரிசர்வ் சைட் இடத்தில் பிரம்மாண்டமான முறையில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.



கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பூங்கா சமீபகாலமாக போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதாகவும், பூங்கா மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் முற்றிலும் சேதம் அடைவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேரன்மாநகர் பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சேரன்மாநகர் கடைசி பஸ் ஸ்டாப் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்கா பராமரிப்பு பணி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் பூங்கா பராமரிப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் இருவருக்கு 7,000 ரூபாய் வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பராமரிக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்திற்கு மாதம்தோறும் 65,000 ரூபாய் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு பக்கெட், இரண்டு மக் மட்டுமே ஒப்பந்ததாரர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்றும் பூங்கா பராமரிப்புக்குத் தேவைப்படும் அடிப்படை உபகரணங்களான அரிவாள், கடப்பாரை, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ஓஸ் பைப் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வதற்குத் தேவைப்படும் பினாயில் ஆசிட் உள்ளிட்ட எந்த பொருட்களும் ஒப்பந்தம் எடுத்து உள்ள தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



பூங்கா வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விலங்குகளின் சிலைகள் சேதம் அடையத் துவங்கியுள்ளன தவிர செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி காட்சிப் பொருளாக மட்டும் உள்ளது.



மேலும் பூங்கா வளாகத்துக்குள் பல்வேறு இடங்களில் நடை பாதையில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது.

மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 3-மாதங்களில் முடிகிறது. அடுத்த முறை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்கும் பணியை எடுத்து நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல லட்சம் ரூபாய் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்குக் கோவை மாநகராட்சி 22-வது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாபு அவர்கள் மாமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...