கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துங்கள்: வெற்றி பெற்ற சி.பி.எம் மன்ற உறுப்பினர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

வெற்றி பெற்ற சி.பி.எம் மன்ற உறுப்பினர்களிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மன்ற உறுப்பினருக்கு உண்டான அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 12-ஆவது வார்டு வி.இராமமூர்த்தி, 24-ஆவது வார்டு ஆர்.பூபதி, 13-ஆவது வார்டு என்.சுமதி, 28-ஆவது வார்டு கண்ணகி ஜோதிபாசு ஆகியோரும், காரமடை நகராட்சி 1-ஆவது வார்டில் வெற்றி பெற்ற ரா.பிரியா, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 8-ஆவது வார்டில் வெற்றி பெற்ற என்.சிவராஜ், 1-ஆவது வார்டு உமாதேவி, இருகூர் பேரூராட்சியில் 8-ஆவது வார்டில் வெற்றி பெற்ற ஸ்டாலின்குமார், 3-ஆவது வார்டில் வெற்றி பெற்ற ராஜேஷ்வரி சண்முகம், அன்னூர் பேரூராட்சி 8-ஆவது வார்டில் வெற்றி பெற்ற முகமது முசீர், 5-ஆவது வார்டில் வெற்றி பெற்ற மணிகண்டன், சூலூர் பேரூராட்சியில் 7-ஆவது வார்டில் வெற்றி பெற்ற எம்.வேலுச்சாமி, இடிகரை பேரூராட்சி 13-ஆவது வார்டில் வெற்றி பெற்ற கற்பகம் குப்புராஜ், வேட்டைக்காரன் புதூர் 15-ஆவது வார்டில் வெற்றி பெற்ற சாத்துக்குட்டி ஆகிய 14-பேர் கோவை மாவட்டத்தில் மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.



கோவை மாவட்டத்தில் வெற்றிபெற்ற மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்களுக்குத் தலைவர்கள் சால்வை அணிவித்துக் கௌரவித்தனர். இதனைத்தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தின் கோவை மாவட்டத்தின் முடிவுகளைத் தமிழகத்தின் அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து சட்டமன்றத் தொகுதிகளையும் நாங்கள் வென்றோம் உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்தையும் நாங்கள் தான் வெல்வோம் என்கிற மமதையோடு அதிமுகவும், நாங்கள் தான் எல்லாம் என்கிற வெற்று கொக்கரிப்போடு பாஜகவும் இருந்தது.

ஆனால், தமிழகத்திலேயே கோவை மாநகராட்சியில் மிக குறைந்த அளவிற்கு 3-இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக, ஒரு இடங்களிலும் வெற்றி பெறாதது மட்டுமல்லாமல் 86-வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக என தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு வெற்றியை அள்ளி வழங்கியுள்ளது.

மாநகராட்சியில் மட்டுமல்லாது, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அத்தகைய வெற்றியை ஈட்டி வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியாளர்களுக்குக் கட்சியின் மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி என்பது மிகப்பெரியது.

நேரிடையாக மக்களைச் சந்திப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் அன்றாடம் மக்களோடு இருப்பவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பைப் பெற்றுள்ள நமது கட்சியின் உறுப்பினர்கள் மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் மன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களை மேம்படுத்துவது, தரம் உயர்த்துவதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அனைத்து குடும்பங்களிலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதும், எளிய குடும்பத்தினர் வீட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அனைவருக்கும் கல்வி என்கிற இலக்கில் கவனம் செலுத்தினால் அது சம்பந்தப்பட்ட குடும்பத்தை அடுத்த உயரத்திற்குக் கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும். அத்தகைய உன்னதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...