ஒடிசாவிலிருந்து கோவைக்கு பேருந்தில் கடத்தி வந்த 553-கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநர்கள் 2-பேர் கைது

ஒடிசாவிலிருந்து கோவைக்கு பேருந்தில் கடத்தி வந்த 10-மூட்டைகளில் இருந்த 553-கிலோ குட்காவை போலீசார் கைப்பற்றி உடனடியாக சொகுசு பேருந்து மற்றும் காரை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் 2-பேரை கைது செய்தனர்.


கோவை: ஒடிசாவிலிருந்து கோவைக்கு பேருந்தில் கடத்தி வந்த 10-மூட்டைகளில் இருந்த 553-கிலோ குட்காவை போலீசார் கைப்பற்றி உடனடியாக சொகுசு பேருந்து மற்றும் காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்து விசாரணை நடத்தினர்.

கோவை அவிநாசி சாலை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே சொகுசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து மூட்டை மூட்டையாக ஏதோ ஒரு பொருளை காரில் ஏற்றுவதாகவும் கருமத்தம்பட்டி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் ஞானவேல் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதிக்குச் சென்று பஸ் மற்றும் காரை சோதனையிட்டனர்.

அப்போது 10-மூட்டைகளில் 553-கிலோ குட்கா ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து. போலீசார் உடனடியாக சொகுசு பேருந்து மற்றும் காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துவந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சொகுசு பேருந்தை ஓட்டி வந்தது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (36) மற்றொரு டிரைவர் மதுரையைச் சேர்ந்த செல்வம் (38) ஆகியோர் என்பதும், கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்த இம்ரான் கான் என்பவர் ஒடிசா மாநிலத்திலிருந்து குட்காவை வாங்கி சொகுசுப் பேருந்தில் கடத்தி வந்து காரில் கோவை கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்து ஓட்டுநர்கள் செல்வம் மற்றும் முருகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான குட்கா வியாபாரியான இம்ரான் கான் மற்றும் அன்னூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாபு ஆகிய 2-பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...