கோவையில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் தினத்தோறும் 80-ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற விண்ணப்பிப்பதாகவும், இதனால் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது தாமதம் ஏற்படுவதாகவும், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணைய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் தெரிவித்துள்ளார்.


கோவை: நாடு முழுவதும் தினத்தோறும் 80-ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற விண்ணப்பிப்பதாகவும், இதனால் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது தாமதம் ஏற்படுவதாகவும், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணைய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் தெரிவித்துள்ளார்.



மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் கூட்டரங்கில் நடைபெற்றது.



இதில் மத்திய ஆணையாளர் நீலம் ஷமி ராவ் கலந்து கொண்டார்.



கோவை பிராந்தியத்திற்கு உட்பட்ட 6-மண்டல அலுவலகங்கள் மற்றும் 13-மாவட்ட அலுவலகங்களின் பங்குதாரர்களான தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களை முன்வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர் பேசும் போது, அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கோவை திருப்பூர் மாவட்ட பின்னலாடை நிறுவனங்களுக்கு பணிக்கு வரும் போது, ஆதார் இல்லாததால் பணியில் இணைக்க முடிவதில்லை என குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து நீலம் ஷமி ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது எனவும் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்த நிலையில் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து பயனுள்ள ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாகச் சாதாரண பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் பலன்கள் கிடைப்பது தொடர்பாக தொழில்துறையினர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்குப் பயன் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.



நாடு முழுவதும் கொரோனா காலத்தில் 72-லட்சம் பேர் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், தினசரி 80-ஆயிரம் முதல் 1-லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் இணையதள வேகம் குறைந்து பிரச்னைகள் ஏற்படுவதாகவும் இதனை மாற்று வழிகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.



கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகள் கட்டத்தவறிய பி.எப்., தொகை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும் எனக்கூறிய அவர், வங்கிகள் பிரச்சினை அல்லது பெயர் மாற்ற பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே இது போன்று நிகழ்வதாகவும், இவை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...