முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா: கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

விழாவில் கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன் கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து, ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.


கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் கிருஷ்ணசாமிபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டி.எல்.சிங், கார்த்திகேயன், மகேஷ்குமார், கனகராஜ், வினு, அரவிந்த், லட்சுமணன், கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...