361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் உடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இணையதள மூலம் பாடத்திட்ட பயிற்சி துவக்கம்


கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இருபெரும் நிறுவனங்களுக்கிடையே ஜனவரி 10ம் தேதியன்று (இன்று) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வேளாண் பல்லைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி மற்றும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் பெ.சாந்தி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.அனந்தகுமார் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் சாய்சுமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்டங்களான முதுநிலை வணிக மேலாண்மை, முதுநிலை பட்டயப் படிப்பான எரிசக்தி மேலாண்மை மற்றும் சான்றிதழ் பாடங்களான, வீடு மற்றும் மாடித்தோட்டம், மூலிகை மற்றும் வாசனைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

வீடு மற்றும் மாடித்தோட்ட விவசாயத்தில் பெருகி வரும் நகர்ப்புற வாசிகளின் ஆர்வத்தின் காரணமாகவும், இளைஞர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இப்புதிய முயற்சிக்கு வித்திட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை இணையதள வழியாக செயல்படுத்துவதற்குரிய தொழில்நுட்பங்களை 361 டிகிரி மைண்ட்ஸ் வழங்க இருக்கிறது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...