கோவையில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட வருவாய் நிர்வாகத்தைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மாவட்ட வருவாய் நிர்வாகத்தைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



"தகுந்த முகாந்திரம் இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், நியாயமற்ற காரணங்களுக்காக விளக்கம் கேட்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.

ஆய்வுக் கூட்டங்களில் கடுமையாக நடந்து கொள்வது கோப்புகளில் கையொப்பம் இடுவதற்கு நீண்ட நேரம் காக்க வைப்பது கோப்புகளைத் தூக்கி எறிவது போன்ற செயல்களை மாவட்ட வருவாய் அலுவலர் நிறுத்த வேண்டும். அரசு விருந்தினர் மாளிகைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மேற்கொள்ளப்படும் செலவினங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்துக் கூறிய அவர்கள், அரசு விருந்தினர் மாளிகைக்கு முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கான செலவுகளை அலுவலர்கள் தங்களது சம்பளத்தைக் கொண்டு செலவிடுவதாகத் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் அலுவலர் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கோப்புகளில் கையொப்பம் பெற சென்றால் நீண்ட நேரம் காக்க வைப்பதாகவும் சில நேரங்களில் கோப்புகளைத் தூக்கி எறிவது போன்ற செயல்களைச் செய்வதாகவும் தெரிவித்தனர்.



மேலும் நியாமற்ற காரணங்களுக்காக வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்கும் பொழுது அது குறித்து விளக்கம் கேட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். முகாந்திரம் இல்லாமல் துணை வட்டாட்சியர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் இவற்றை எல்லாம் குறித்து வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் மேற்கொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் திங்கட்கிழமை முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...