பல்லடம் அருகே கூலி உயர்வினை ஒப்பந்த வடிவில் வழங்கக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இரண்டாம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம்..!

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 700க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே கூலி உயர்வினை ஒப்பந்த வடிவில் வழங்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்களை வலியுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இரண்டாம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் 3 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு, நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது.



இந்நிலையில், அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியும், விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் 21ம் தேதி முதல் காரணம்பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் என 5 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவீதமும் என உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து பல்லடம், மங்கலம், 63.வேலம்பாளையம் உள்ளிட்ட 4 சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று விசைத்தறியை இயக்கி வருகின்றனர்.



சோமனூர் உள்ளிட்ட 5 சங்கங்கள் எழுத்து வடிவிலான ஒப்பந்தம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்த இரண்டாம் நாளான இன்று காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 700க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...