கோவை மாநகராட்சி 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

வாக்குப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாகக் கூறி வெற்றி பெற்ற வேட்பாளரைத் தவிர இதர வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாநகராட்சி 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என வெற்றி பெற்ற வேட்பாளரைத் தவிர்த்து இதர வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 32வது வார்டில் கட்சி மட்டும் சுயேச்சை வேட்பாளர்கள் என 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



அந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாகக் கூறி அந்த வார்டில் போட்டியிட்ட இதர வேட்பாளர்கள் வெளிநடப்பு செய்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து, வெளிநடப்பு செய்த வேட்பாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கயிறு பிரிக்கப்பட்டு முத்திரை அகற்றப்பட்டு இருந்ததாகவும், அது குறித்து தேர்தல் அதிகாரிகள் முறையாக பதிலளிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், வாக்குப் பெட்டியில் உள்ள EVM எண்ணைத் தவிர மற்ற எண்களை தங்களுக்கும் பூத் ஏஜெண்டுகள் காண்பிக்காமல் வாக்குகளை எண்ண முயன்றதாகவும், பூத் ஏஜெண்டுகளின் கையெழுத்துகள் மாறுபட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.



மேலும், 21ம் தேதி அன்று இரவு சுமார் 12 மணி முதல் 3 மணி வரை இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனால் வாக்கு பெட்டிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் அந்த வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...