உலக தாய்மொழி நாளை முன்னிட்டு கோவை கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு..!

மேலும், அனைவரும்‌ தாய்‌ மொழியில்‌ பெயரின்‌ முதல்‌ எழுத்துடன்‌ கையொப்பமிட உறுதிமொழியேற்றனர்.


கோவை: உலக தாய்மொழி நாளை முன்னிட்டு கோவை கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

கோவை கற்பகம்‌ உயர்கல்விக்கழக மொழிகள் துறையின் தமிழ்ப்பிரிவு, தமிழ்‌ மன்றம் சார்பில்‌, உலக தாய்மொழி நாளை கொண்டாடும்‌ வகையில்‌ தமிழுணர்வையும் தாய்மொழிப்‌ பற்றையும்‌ ஊக்குவிக்கும்‌ விதமாக சிறப்புச்‌ சொற்பொழிவானது 21.02.2022 (திங்கள்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில்‌ பல்கலைக்கழக வளாகத்தில்‌ நடைபெற்றது .



இவ்விழாவில்‌, கற்பகம்‌ உயர்கல்விக்கழக மொழிகள் துறை தமிழ்ப்பிரிவின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ இரா.மதன்குமார் அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌. நிகழ்விற்கு மாணவர்‌ நலன்‌ முதன்மையர்‌ பா.தமிழரசி அவர்கள்‌ தலைமை தாங்கிப்பேசினார்‌.

அவ்வுரையில்‌, உலக தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்‌ மொழியின்‌ பெருமை, தமிழரின்‌ சிறப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி, நாம்‌ தமிழர்களாய்‌ பிறந்ததற்கு மிகவும்‌

பெருமைப்படவேண்டும்‌. அனைவரும்‌ தாய்‌ மொழியில்‌ பெயரின்‌ முதல்‌ எழுத்துடன்‌ கையொப்பம்‌ இடுவதற்கு உறுதி ஏற்போம்‌ என்று உரையாற்றினார்‌.

அதனைத்தொடர்ந்து, கலை அறிவியல்‌ மற்றும்‌ மானுடவியல்‌ புல முதன்மையர்‌ முனைவர்‌ நா.வெ.பாலாஜி அவர்கள்‌ தாய்மொழியில்‌ கல்வி கற்பதன்‌ அவசியத்தை எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங்கினார்‌.

இதையடுத்து, குமரகுரு கல்வி வளாகத்தின் ந.மகாலிங்கம்‌ தமிழாய்வு மையத்‌ தலைவர்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ மாநிலத்தொல்லியல்‌ துறை கல்வெட்டியல்‌ அறிஞர்‌ முனைவர்‌ இரா.ஜெகதீசன்‌ அவர்கள்‌ சிறப்புரை ஆற்றினார்‌. தமிழ்‌ மொழியின்‌ தொன்மையினை உணர்த்தும்‌ வகையில்‌ கற்காலம்‌ முதல்‌ தற்காலம்‌ வரை தமிழ்‌ மொழி அடைந்த வளர்ச்சிநிலைகளை காட்சிப்படங்களின்‌ மூலம்‌ விளக்கினார்‌.

மேலும், விழா நிறைவில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில்‌ முதல்பரிசு செல்வன்‌ சி. சுதர்சன்‌ இளம்‌ அறிவியல்‌ [கணிதவியல்‌] இரண்டாமாண்டு மற்றும்‌ கவிதைப்போட்டியில்‌ முதல்பரிசு செல்வி ஜெ.ரூபா ஸ்ரீ இளம்‌ அறிவியல்‌ [கணினி அறிவியல்‌] இரண்டாமாண்டு, ஓவியப்போட்டியில்‌ முதல்பரிசு

செல்வி ஜ.அ.சனோபர்‌ பாத்திமா இளம்‌அறிவியல்‌ [உயிர்‌ வேதியல்‌] இரண்டாமாண்டு, பேச்சுப்போட்டியில்‌ முதல்பரிசு செல்வன்‌ சி.சுதர்சன்‌ இளம்‌ அறிவியல்‌ [கணிதவியல்‌] இரண்டாமாண்டு என இப்போட்டிகளில்‌ வெற்றிபெற்ற மாணவர்களுக்குப்‌ பரிசுகளும்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்பட்டன.



அத்துடன்‌, உலக தாய்மொழி நாள்‌ உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களும்‌ ஆசிரியர்களும்‌ உறுதிமொழியேற்றனர்‌. விழா நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்‌ முனைவர்‌ ஆறுச்சாமி.செ நன்றியுரை கூறியதையடுத்து விழா இனிதே நிறைவுற்றது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...