இனி வர இருக்கின்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது: கோவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி..!

இனி வர இருக்கின்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என பல்லடம் மற்றும் வெள்ளகோவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


கோவை: இனி வர இருக்கின்றதேர்தல்களில் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என பல்லடம் மற்றும் வெள்ளகோவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-தேதியன்று நடைபெற்றது. 22-ம் தேதியான நேற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றி உள்ளது.

அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் வெள்ளகோவில் நகராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் நேற்று பல்லடத்துக்கு வருகை தந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்த மகத்தான வெற்றி தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி.மேலும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்த அதிமுகவினருக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத மக்கள் கொடுத்த பதிலடி.

கடந்த 8-மாத ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்து இருக்கிறது. அதற்கு நற்சான்று தரும் வகையிலும், வரவேற்பு அளிக்கும் வகையிலும் இந்த வெற்றியை மக்கள் அளித்திருக்கிறார்கள்.

இன்னும் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைய இருக்கிறது. அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் இதைவிட மோசமான தோல்வியைத்தான் அதிமுகவினர் தழுவுவார்கள். அதற்கு இந்தத் தேர்தல் முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என அவர்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 96-ம் ஆண்டு கலைஞர் தலைமையில், திமுக மகத்தான வெற்றி பெற்றது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது கலைஞர் ஐந்தாவது முறையாக முதல்வராக ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

கடந்த 2016-நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் சிறப்பான வெற்றி வாய்ப்பை அளித்துள்ளனர். ஏதோ ஒரு சில நேரங்களில் வெற்றி பெற்றதை வைத்துக்கொண்டு அதிமுகவினர் கோட்டை கோட்டை என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. மக்கள் விழித்துக் கொண்டார்கள். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மோசடி முறைகேடுகள் தில்லு முல்லுக்களை, பணபலம் அதிகார பலத்தை வைத்துத் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

அது முழுமையான வெற்றி அல்ல. தற்போது திமுகவின் எட்டு மாத கால ஆட்சிதான் நடந்து வருகிறது. இனி அது தொடர்ந்து நடைபெற்று வரும் பட்சத்தில் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று கூறியவர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு காவல்துறையும், நீதித்துறையும் இருக்கிறது.

இவரே சட்ட ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டதும், சட்டத்தைக் கையில் எடுத்து கொண்டதாக அடையாளம் காட்டியது. அதற்குப் பிறகு தான் சட்டம் அவருக்குத் தக்க பாடம் புகட்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் பலரும் நகராட்சியில் திமுக கூட்டணி, கூட்டணியின் வெற்றி பெற்ற 14-வேட்பாளர்களும் வெள்ளகோவில் நகராட்சியில் திமுக கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்ற 15-வேட்பாளர்களும் மற்றும் நகரப் பொறுப்பாளர் ராஜேந்திர குமார், பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் குமார், ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...