பொள்ளாச்சியில் ஒரு நகராட்சி மற்றும் 9-பேரூராட்சிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் 9-பேரூராட்சிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் 9-பேரூராட்சிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், பெரிய நெகமம், சமத்தூர் ஜமீன் ஊத்துக்குளி சூளேஸ்வரன்பட்டி கிணத்துக்கடவு ஆகிய ஒன்பது பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக எட்டு மணி அளவில் தொடங்கியது.

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி, ஆனைமலை வி ஆர் டி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.



முதல் கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.



வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு வார்டுக்கு வேட்பாளர் ஒருவர் இரண்டு முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.



தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...