உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தபால் வாக்கு பெட்டிகள் அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தபால் வாக்கு பெட்டி வாக்கு எண்ணிகை தொடங்கியது.
கோவை: உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், தபால் வாக்கு பெட்டிகள் அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தபால் வாக்கு பெட்டி வாக்கு எண்ணிகை தொடங்கியது.
கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது.
கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு, கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இன்று 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது.

இந்நிலையில், கோவை மாநகரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' தற்போது அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இயந்திரங்கள் வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.