நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்‌ - 2022 க்கான வாக்கு எண்ணிக்கை

கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல்‌ வாக்கு எண்ணிக்கை நாளை 22.02.2022 ம்‌ தேதி கோவை மாநகர்‌, தடாகம்‌ சாலையில்‌ உள்ள அரசு பொறியியல்‌ கல்லூரியில்‌ (Government College of Technology) அமைந்துள்ள வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ளது.



கோவை: தமிழ்நாடு தேர்தல்‌ ஆணையத்தால்‌ தமிழ்நாடு முழுவதும்‌ கடந்த 19.02.2022 ம்‌ தேதி நடத்தப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்‌ - 2022 க்கான வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம்‌ தேதி நடைபெறும்‌.

கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல்‌ வாக்கு எண்ணிக்கை நாளை 22.02.2022 ம்‌ தேதி கோவை மாநகர்‌, தடாகம்‌ சாலையில்‌ உள்ள அரசு பொறியியல்‌ கல்லூரியில்‌ (Government College of Technology) அமைந்துள்ள வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பின்வரும்‌ விபரங்கள்‌ அனைத்து வேட்பாளர்களுக்கும்‌ அல்லது அவர்கள்‌ முகவர்களுக்கும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

1. தேர்தல்‌ பணியில்‌ உள்ள அரசு அலுவலர்கள்‌ வாகனங்கள்‌ தவிர, வாக்கு எண்ணும்‌ மையமாகிய அரசு பொறியியல்‌ கல்லூரிக்கு வரும்‌ வேட்பாளர்கள்‌ அல்லது அவர்களது முகவர்களின்‌ வாகனங்கள்‌ கல்லூரியின்‌ பிரதான வாயில்‌ (Main Gate) வழியாக உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.

2. வேட்பாளர்கள்‌ அல்லது அவர்களது முகவர்களின்‌ வாகனங்கள்‌ GCT கல்லூரிக்கு 100 மீட்டர்‌ முன்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும்‌.

3. வேட்பாளர்கள்‌ அல்லது அவர்களது முகவர்கள்‌ தங்களது அலைபேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்களையும்‌ (Electronic gadgets) வாக்கு எண்ணும்‌ மையமான அரசு பொறியில்‌ கல்லூரிக்குள்‌ எடுத்து வரக்கூடாது.

4. வாக்கு எண்ணும்‌ மையத்தின்‌ பிரதான வாயிலில்‌ தக்க பரிசோதனைக்கு பிறகே வேட்பாளர்கள்‌ அல்லது அவர்களது முகவர்கள்‌ உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்‌.

5‌. கோவை மாவட்ட தேர்தல்‌ அதிகாரி அல்லது உதவி தேர்தல்‌ அதிகாரி (மாநகராட்சி ஆணையர்‌) அவர்களால்‌ வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள்‌ மட்டுமே வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ அனுமதிக்கப்படுவர்‌.

6. வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ கோஷம்‌ எழுப்புவதற்கும்‌ அல்லது வேறு எந்த செயல்களுக்கும்‌ அனுமதி கிடையாது.

7. வாக்குப்பதிவு எண்ணுதலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும்‌ கோவை மாநகர காவல்‌ துறை மேற்கொண்டுள்ளது.

8. வாக்கு எண்ணிக்கை தினமான 22.02.2022 ம்‌ தேதியன்று கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நான்கு துணை ஆணையர்கள்‌, 5-சிறப்புக் காவல்‌ படை நிறுமங்கள்‌, 100 அதிரடிப்படையினர்‌ உட்பட 2400 பேர்‌ பாதுகாப்பு அலுவலில்‌ ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்‌. இதில்‌ 24 நான்கு சக்கர ரோந்து வாகனம்‌, 44 இருசக்கர ரோந்து வாகனம்‌, 11 சோதனைச்‌ சாவடிகள்‌, முக்கியமான 16 கட்சி அலுவலகங்களுக்கு 16 பிக்கட்ஸ்கள்‌ கோவை மாநகர முக்கிய சந்திப்புகளாக 113 இடங்கள்‌ கண்டறியப்பட்டு அனைத்து இடங்களுக்கும்‌ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும்‌ முக்கிய அரசியல்‌ தலைவர்களின்‌ 9 சிலைகளுக்கும்‌ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ஆணையர்‌ மற்றும்‌ உதவி ஆணையர்களுக்கு 16 Striking Force மற்றும் 10 அதிவிரைவுப்படைகள்‌ செயல்பட உள்ளது.

9. விதிமீறல்களில்‌ ஈடுபட்டு சட்டம்‌ ஒழுங்கு பிரச்சனையில்‌ ஈடுபடுபவர்கள்‌ அல்லது வன்முறையில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது தகுந்த சட்ட பூர்வ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌.

10. நாளை 22.02.2022 ஆம்‌ தேதி வாக்கு எண்ணிக்கை மையமான தடாகம்‌ ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியின்‌ பகுதியில்‌ போக்குவரத்து மாற்றங்கள்‌.

11. கௌலி பிரெளன்‌ ரோடு காந்திபார்க்‌ ரோடு மற்றும்‌ மருதமலை ரோடு வழியாக வரும்‌ வேட்பாளர்கள்‌ மற்றும்‌ அவர்களது முகவர்கள்‌, லாலிரோடு ஜங்சனில்‌ தடாகம்‌ ரோடு வழியாகத் தமிழ்நாடு வனக்கல்லூரி சென்று அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு வாக்கு எண்ணும்‌ மையத்திற்கு வரவேண்டும்‌.

12. ஆனைக்கட்டியிலிருந்து வரும்‌ சாலையில்‌ வரும்‌ வேட்பாளர்கள்‌ மற்றும்‌ அவர்களது முகவர்கள்‌ அவர்களது வாகனங்களை மேட்டுப்பாளையம்‌ ரோடு, லாலி ரோடு ஜங்சன்‌ வழியாக தமிழ்நாடு வனக்கல்லூரி சென்று அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு வாக்கு எண்ணும்‌ மையத்திற்கு வரவேண்டும்‌ அல்லது அழகேசன்‌ ரோடு வழியாக தங்களது வாகனத்தைத் தமிழ்நாடு வனக்கல்லூரியில்‌ உள்ள வாகனம்‌ நிறுத்தும்‌ இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவர்கள்‌ அழகேசன்‌ ரோடு சந்திப்பிலிருந்து அரசு பொறியியல்‌ கல்லூரிக்கு நடந்து வந்து பிரதான நுழைவு வாயில்‌ வழியாக உள்ளே செல்லலாம்‌.

13. காந்திபார்க்‌ வழியாக வாகனத்தில்‌ வரும்‌ பொதுமக்கள்‌ மேட்டுப்பாளையம்‌ ரோடு வழியாகச் சென்று NSR ரோட்டிற்கு செல்லலாம்‌.

14. அவிநாசிலிங்கம்‌ கல்லூரி வழியாக வாகனத்தில்‌ வரும்‌ பொதுமக்கள்‌ பாரதி பார்க்‌ 4 வழியாகத் திரும்பி NSR ரோட்டிற்கோ அல்லது தடாகம்‌ ரோட்டிற்கோ செல்லலாம்‌ என்று தெரிவித்துக்‌ கொள்ளப்படுகின்றது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...