கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய் மொழி நாள் பன்மொழி கலை விழா

உலக தாய் மொழி தினமான இன்று கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், உலக தாய் மொழி நாள் பன்மொழி கலை விழா நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியும், கவிதைகளை வாசித்தும் திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: உலக தாய் மொழி தினமான இன்று 21.02.2022 மாலை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், உலக தாய் மொழி நாள் பன்மொழி கலை விழா நடத்தப்பட்டது.



இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்திய மரபுக் கவிஞரும், எழுத்தாளருமான பா.மீனாட்சிசுந்தரம் பேசும்போது, "மொழிகள் குற்றமற்றவை அவை பயன்படுத்தப் படுவராலேயே அதன் தன்மைகள் மாறுபடுகின்றது. மொழி இயல்பாகத்தான் தோன்றி இருக்கவேண்டும். மொழியின் வேர் எங்கு இருக்கிறது என்று மனிதன் ஆராய்ந்த போது தான் கடவுள் வழங்கியதாக முடித்துக் கொண்டான்.

விவிலியம் ஆதாம் எது எதை எல்லாம் எவ்வாறு அழைத்தானோ அது அதுவே அதன் பெயர் என்று ஆகிப் போனது என்று கூறுகிறது. பாபிலோனிய காவியமான கில்கமீஸ்சில் மனிதன் சொர்க்கம் வானத்தில் இருப்பதாகக் கருதி வானை முட்டும் அளவிற்கு ஒரு ஒரு மாளிகை கட்ட நினைத்தான்.

இதை கடவுள் அறிந்து கொண்டு அந்த கனவை தகர்க்க ஒவ்வொரு மனிதனையும் ஒரு ஒரு மொழி பேசும்படி செய்தார். இதானால் ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியவில்லை.

இதனால் சண்டைகள் ஏற்பட்டது. எனவே, மாளிகை கட்டும் முயற்சி கைவிடப்பட்டது, மனிதர்கள் பிரிந்து சென்றார்கள் என்று கூறுகிறது.

எகிப்த நாட்டை சேர்ந்த ஒரு அரசன் யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் ஒரு மனிதன் கடவுளின் மொழியைப் பேசுவான் என்ற விவிலியத்தின் கூற்றை ஆராய, புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றை யாருமற்ற ஒருதீவில் வாழும் ஒரு ஆடுமேய்க்கும் ஊமையனிடத்தில் கொடுத்து வளர்க்க ஏற்பாடு செய்தான். இரண்டு ஆண்டுகள் கழித்துச் சென்று பார்த்தபோது, அந்த குழந்தை, ஆடுகள் பேசும் மொழியைப் பேசிக்கொண்டு இருந்தது.

எனவே, மொழியை சமூகம்தான் உருவாக்குகிறது. ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் காலடி வைப்பதற்கு முன்னர் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடிகள், எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழியைப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அழகாகப் பாடக் கூடியவர்கள் அவர்களது பாடல்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறுகளையும் மலைகளையும், காடுகளையும் பற்றியதாக இருக்கும்.

இது குறித்து ஒரு எழுத்தாளர் கூறுகிறார். ஆஸ்திரேலியா பழங்குடிகளின் பாடல்களைத் தொகுத்திருந்தால், ஆஸ்திரேலியாவின் ஒரு முழுமையான வரைபடம் கிடைத்திருக்கும் என்று. எனவே, மொழி சமூக கூறுகளை உள்ளடக்கியது என்றும் மீனாட்சி சுந்தரம் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, பிரெஞ், உகாண்டா அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பாடல் களை பாடியும், கவிதைகளை வாசித்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.



அவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்குத் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் வி.சுப்பரமணியன் தலைமை தாங்கினார்.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை தலைவர் இரா. ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். முனைவர் அ.பொன்னுசாமி, பல்சமைய நல்லுறவு இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஹாஜி முகமது ரஃபி, இஸ்கப் பொதுசெயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பல்சமைய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி பரிசுகள் வழங்கினார். ப.பா.ரமணி நன்றி கூறினார். இதில் யூ.கே.சுப்ரமணியன், கே.சுப்ரமணியன், எஸ்.கோட்டிப்பன், எம்.வி.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இஸ்கப் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...