கோவையில் தடுப்பூசி விழிப்புணர்வால் கொரோனா எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.


கோவை: தமிழகத்தில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது. இதுகுறித்துக் கண்டறியச் சுகாதாரத் துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

4-வது கட்ட ஆய்வு:-

மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 3-கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பாற்றால் கண்டறியும் 3-வது கட்ட ஆய்வுகளில் 42-இடங்களில் தலா 30-பேர் வீதம் 1,260-பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

தடுப்பூசி விழிப்புணர்வு:-

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் 32-சதவீதம் பேருக்கும், 2-ம் கட்ட ஆய்வில் 29-சதவீதம் பேருக்கும், 3-ம் கட்ட ஆய்வில் 70-சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்பாற்றல் கண்டறியப்பட்டது.

4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 86-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...