பொள்ளாச்சியில் மத்திய அரசு சார்பில் கைத்தறி திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்கம்

கைத்தறி நெசவில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்க பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.


கோவை: கைத்தறி நெசவில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்க பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வரும் நிலையில், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில், புதிய கைத்தறி நெசவாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சிப் பட்டறையில், இன்று மத்திய அரசின் கைத்தறி நெசவு வளர்ச்சி ஆணையம் சார்பில், சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.



45-நாட்கள் பயிற்சி வகுப்புகள் கொண்ட இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர். இந்த முகாமில் 45-நாட்களுக்குக் கைத்தறி நெசவு செய்வது குறித்தும், நெசவு செய்த துணிகளைச் சந்தைப்படுத்துவது விற்பனை செய்வது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



நிகழ்ச்சியில், நெசவாளர் சேவை மைய இயக்குனர் கார்த்திகேயன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், மத்திய அரசு சார்பில் பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமின் மூலம், ஏராளமான கிராமப்புற பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் கிராமப்புற பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...