மேட்டுப்பாளையம் - பில்லூர் சாலையில் அரசுப்பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை..!

பேருந்து நீர் ஆடி என்ற மலைக் கிராமத்திற்கு அருகே சென்ற போது வந்த காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் - பில்லூர் சாலையில் அரசுப்பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான வால்பாறை, மதுக்கரை, எட்டிமடை, ஆனைகட்டி, தடாகம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில், அவ்வப்போது காட்டை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்கள், வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.

சில சமயங்களில் சாலைகளில் வந்து வாகனங்களை மறித்து உலாவருகின்றன. அதனிடம் கிராம மக்கள் பேச்சுக் கொடுத்து வனத்துக்குள் அனுப்பும் ஒரு சில சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து தினசரி பில்லூர் அணை பகுதிக்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

வழக்கம்போல, கோவையிலிருந்து பில்லூர் அணை பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நீர் ஆடி என்ற மலை கிராமத்திற்கு அருகே சென்ற போது எதிரே ஒற்றை காட்டு யானை நடந்து வந்தது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். யானை சிறிது நேரம் அங்கேயே உலாவிக் கொண்டிருந்தது. பயணிகள் அச்சத்துடன் அமைதியாக இருந்தனர்.

பின்னர், சிறிது நேரம் கழித்து காட்டு யானை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்ததையடுத்து, அரசு பேருந்து பில்லூர் அணைப் பகுதிக்கு சென்றது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...