திருப்பூரில் தொடரும் கொலைகளால் பரபரப்பு..!! காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கை, கால்கள் கட்டிய நிலையில் வாலிபர் கொலை..!

திருப்பூரில் தொடர்ந்து 3 வாரமாக ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



திருப்பூர்: திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கை, கால் கட்டிய நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள காட்டன் மார்க்கெட் வளாகமானது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூக்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி செல்லும் இடமாக திகழ்கிறது.

இந்நிலையில், காட்டன் மார்க்கெட்டுக்கு இன்று அதிகாலை வழக்கம் போல வியாபாரிகள் பூக்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக வந்துள்ளனர். அப்பொழுது அந்த வளாகத்தில் கை, கால்கள் கட்டிய நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், கொலை செய்யப்பட்டது யார் என்று தற்போது வரை தெரியவில்லை.

தற்பொழுது காவல்துறையினர் சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரில் தொடர்ந்து 3 வாரமாக ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...