கோவையில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் அதிமுகவினரை வரவழைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட அதிமுகவினர் திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.



கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காளப்பட்டி சுகுணா திருமண மண்டபத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் நாளை நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கையை எதிர்கட்சியினர் சீர் குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். கோவையில் எதிர்கட்சியினர் வன்முறையை, கலவரத்தை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

நாளை வாக்கு எண்ணிகையின் போது எந்த விதமான வன்முறை நடந்தாலும் பொறுமையுடன் செயல்பட திமுக கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். மேலும், நாளை வன்முறை நடந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு தினத்தன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குப் பதிவு மையம் சென்றுள்ளனர். அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.



மேலும், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில் செல்போன்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதிமுகவினர் மட்டும் தான் உள்ளனரா என கவனித்து கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.

மேலும், அதிமுக கூட்டம் நடந்த மண்டபத்தின் கதவுகளை அடைத்து விட்டு பேசி இருக்கின்றனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அதிமுகவினர் 100 பேர் வர வேண்டும் என பேசி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆயிரக்கணக்கில் அதிமுகவினரை வரவழைத்து நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டு இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். சிறு, சிறு பிரச்சனைகள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றுள்ளது அதனைப் போலவே, நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறும் என தெரிவித்தார்.



அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சாவடிகளுக்குள் எப்படி சென்றார். யார் அனுமதித்தார்கள் என கேள்வி எழுப்பிய நிலையல், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்றது குறித்து திமுக சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர், இலவச மின் இணைப்பிற்கு ஆதார் கார்டு கட்டாயமா என்ற கேள்விக்கு, தேர்தல் தவிர பிற கேள்விகளுக்கு பின்னர் பதில் அளிப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.



Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...