கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை கொடியேற்றம்..!

நாளை இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.


கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 14ம் தேதி முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நாளை இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

முன்னதாக, 9க்கு 5 அளவு கொண்ட வெண்மை நிற துணியில் சிம்ம வாகனமும், சக்தியின் சின்னமான சூலாயுதமும், மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் சிவாச்சாரியர்களால் வரைந்து வடிவமைக்கப்பட்டு, கோனியம்மன் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜையும் செய்யப்படும்.

தொடர்ந்து, மங்கள ஒலி முழங்க கொடிமரத்திற்கு சமர்ப்பித்து, சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்படுகிறது. அதன்பின் அக்னிகம்பம், இசையொலிக்கு மத்தியில் கோவிலை மூன்று முறை வலம் வரச்செய்யப்படுகிறது.

சிறப்பு பூஜைகளை அடுத்து கோவில் முகப்பில் அக்னிக்கம்பம் நட்டு, அதில் அக்னிச்சட்டி வைத்து தீ முழக்கமிடப்படும். தொடர்ந்து, மங்கள இசை முழங்க கோனியம்மனுக்கு முத்தாடை அணிவித்து, விநாயகர், சூலதேவர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளுவிக்கப்படுவர்.

கோவிலில் இருந்து இசை முழங்க அம்மன் சப்பரத்தில் புறப்பட்டு, பெரியகடை வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, ராஜ வீதி, தேர்நிலையத்தை தொடர்ந்து மீண்டும் பெரியகடை வீதி வழியாக மீண்டும் கோவிலை அடையும். பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்பாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...