நோய்த்தொற்று பரவல் அதிகரிக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி ஏப்ரலில் கோவை - இலங்கை இடையே விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படும்.
கோவை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை - இலங்கை இடையே ஏப்ரல் முதல் மீண்டும் விமான சேவை இயக்கப்படுகின்றன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட மூன்று வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தற்பொழுது சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கை விமான நிலையங்கள் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் விமான நிலைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில்,
கோவை - இலங்கை இடையே மீண்டும் விமான சேவை மார்ச் 31 முதல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த சர்வீஸ் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படும். இவை அனைத்தும் எதிர்வரும் நாட்களில் நோய்த்தொற்று பரவலின் தன்மையை பொருத்து முடிவு செய்யப்படும். நோய்த்தொற்று பரவல் அதிகரிக்காமல் இருந்தால் திட்டமிட்டபடி ஏப்ரலில் கோவை - இலங்கை இடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விமான சர்வீஸ் மீண்டும் துவக்கப்படும்.
இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.