கற்பகம்‌ கலை மற்றும்‌ அறிவியல் கல்லூரியில்‌ பயின்ற மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சி

கற்பகம்‌ உயர்கல்விக்கழக முன்னாள்‌ மாணவர்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌, 1995-முதல்‌ 2000-ஆம்‌ ஆண்டு வரையில்‌ கற்பகம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயின்ற மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சியானது இன்று சிறப்பாக நடைபெற்றது.


கோவை: கற்பகம்‌ உயர்கல்விக்கழக முன்னாள்‌ மாணவர்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌, 1995-முதல்‌ 2000-ஆம்‌ ஆண்டு வரையில்‌ கற்பகம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயின்ற மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சியானது 20.02.2022, ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்வில்‌ 250-க்கும்‌ மேற்பட்ட முன்னாள்‌ மாணவர்கள்‌ தங்களது குடும்பத்துடன்‌ கலந்துகொண்டு மகிழ்ந்தனர்‌. முன்னதாக இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த முன்னாள்‌ மாணவர்களைக் கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ மாணவர்‌ நல முதன்மையர்‌ முனைவர்‌ ப.தமிழரசி‌ வரவேற்றார்‌.

அதைத்‌ தொடர்ந்து கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ முதன்மைச்‌ செயல்‌ அலுவலர்‌ ௧. முருகையா மாணவர்களுக்கு வாழ்த்துகள்‌ கூறி மகிழ்ந்தார்‌. விழாவில்‌ தலைமை உரை ஆற்றிய கற்பகம்‌ நிகர் நிலைப்பல்கலைக்கழக வேந்தர்‌ டாக்டர்‌ இராச. வசந்த குமார்‌ ‌ முன்னாள்‌ மாணவர்களின்‌ தொழில்‌ முனைதல்‌ மற்றும்‌ அதற்கான திறன்‌ மேம்பாடு முதலான நிலைகளில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனம்‌ என்றும்‌ அவர்களுடன்‌ துணைநிற்கும்‌; அத்தகைய வாய்ப்புகளுக்காக கற்பகம்‌ கல்வி நிறுவனங்களைத்‌ தவறாமல்‌ நாடுங்கள்‌ என்று அறிவுறுத்தினார்‌.



தொடர்ந்து, கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ பெயரால்‌ தாங்களும்‌ உயர்ந்து, கற்பகம்‌ கல்வி நிறுவங்களின்‌ இந்நாள்‌ மாணவர்களின்‌ வளர்ச்சிக்கும்‌ துணை செய்யுங்கள்‌. கற்பகத்தில்‌ கல்விபெற்றால்‌, வானமும்‌ வசப்படும்‌ என்ற வெற்றிச்‌ சிந்தனையைச்‌ சமுதாயத்தில்‌ ஆழமாகப்‌ பதிவுசெய்யுங்கள்‌ என்று வலியுறுத்தினார்‌.

கற்பகம்‌ கல்லூரியில்‌ பயின்ற காலம்‌ என்பது, அழகிய கனாக்‌ காலம்‌; அந்நாள்களில்‌ ஆசிரியர்கள்‌ தங்கள்‌ மீது காட்டிய அன்பும்‌, அரவணைப்பும்‌, கண்முப்பும்‌, தேவையான நேரத்தில்‌ வழங்கிய உயர்ந்த அறிவுரைகளும்‌ இன்றைய தங்களது வளமான வாழ்வுக்கு அமத்தளமாக விளங்குவதாக முன்னாள்‌ மாணவர்கள்‌ தங்களது கல்லூரிக்கால நினைவுகளைப்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...