நீலகிரி கேரளா எல்லையில் கழிவறை தொட்டி குழியில் மீட்கப்பட்ட புலிக்குட்டி முத்தங்கா சரணாலயத்தில் விடப்பட்டது.

புலிக்குட்டிக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர், நைலான் வலை மூலம் புலிக்குட்டியை கிணற்றுக்குள் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், கூண்டில் அடைத்து முத்தங்கா புலிகள் சரணாலயத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


கோவை; நீலகிரி-கேரள எல்லையில் கழிவறை தொட்டி குழியில் இருந்து மீட்கப்பட்ட புலிக்குட்டி, முத்தங்கா சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அடுத்துள்ளது மந்தன்கொல்லி கிராமம். இது நீலகிரி-கேரள எல்லையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். அங்கு இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவறை தொட்டி அமைப்பதற்காக வெட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் ஒரு பாழடைந்த குழி உள்ளது. இந்நிலையில், அந்த குழிக்குள் அப்பகுதி வழியாக வந்த புலிக்குட்டி ஒன்று நேற்று தவறி விழுந்தது.

சிறிய குட்டி என்பதால் அதனால் மேலே வர முடியாமல் தவித்தது. புலிக்குட்டியை பார்த்த அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. இந்த சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்களுக்கு அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, குழிக்குள் புலிக்குட்டி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து, வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. முத்தங்கா சரணாலய கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று புலிக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் புலிக்குட்டிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.பின்னர், நைலான் வலை மூலம் புலிக்குட்டியை கிணற்றுக்குள் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து, மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து அதை கூண்டில் அடைத்து முத்தங்கா புலிகள் சரணாலயத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விடுவித்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...