கோவை பீளமேடு அருகே ஓட்டு போட சென்ற பஞ்சு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 10-பவுன் தங்க நகைகள், பணம் ரூ.5000-ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பீளமேடு அருகே ஓட்டு போட சென்ற பஞ்சு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 10-பவுன் தங்க நகைகள், பணம் ரூ.5000-ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு அடுத்தகோல்ட்வின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (56). பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஓட்டு போட வீட்டிற்குஅருகிலுள்ள பள்ளிக்குச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து துடியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றார். மீண்டும் இன்று காலை வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 10-பவுன் தங்க நகைகள், பணம் ரூ.5000-ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி பீளமேடுபோலீசில் புகார் அளித்தார். உடனே பீளமேடு போலீசார்மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
பின்னர், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்துத் திருடிச் சென்ற கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.