வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் குடத்தில் சிக்கிய நாயின் தலையை மீட்ட பொதுமக்கள்

வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் பிளாஸ்டிக் குடத்தில் நீரைக் குடிப்பதற்காக நாய் ஒன்று தலையைக் குடத்துக்குள் விட்டு வெளியே எடுக்கமுடியாமல் கண் மூடித்தனமாக ஓடியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் பிளாஸ்டிக் குடத்தை லாவகமாக வெட்டி, நாயின் தலையை வெளியே மீட்டனர்.



கோவை: கோவை வெள்ளலூர் சந்தைக் கடை பகுதியில் பிளாஸ்டிக் குடத்தில்நீரைக் குடிப்பதற்காக நாய் ஒன்று தனது தலையைக் குடத்துக்குள் விட்ட நிலையில், அதன்பிறகு தனது தலையை வெளியே எடுக்கமுடியாமல் பெரும் அவதிப்பட்டது.



கோவை அடுத்த வெள்ளூரில் சந்தைக் கடைசாலையோரம் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலை பைப் அருகே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் குடிப்பதற்காகத் தலையை விட்டுள்ளது.

அதன்பிறகு அதனால் தலையை வெளியே எடுக்கமுடியாமல் அரை மணிநேரமாகக்குடத்துடன் அங்கும் இங்குமாக கண் மூடித்தனமாக ஓடியுள்ளது.

அந்தப் பகுதி மக்கள் பிளாஸ்டிக் குடத்தை லாவகமாக வெட்டி, குடத்தில் சிக்கிய நாயின் தலையை வெளியே மீட்டனர். இந்தச் சம்பவத்தால் மிரண்டு போயிருந்த நாய், தன்னை விடுவித்ததும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி மறைந்தது.



Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...