கோவையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்- ருமேனியா நபரின் விசா ரத்தாக வாய்ப்பு

கோவைக்கு தொழில் முறை விசாவில் வந்த ருமேனியா நபர் 'விசா' விதிகளை மீறி, தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தநிலையில், குடியுரிமைத்துறை அதிகாரிகள் நம் நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.


கோவை: கோவைக்கு தொழில் முறை விசாவில் வந்த ருமேனியா நபர் 'விசா' விதிகளை மீறி, தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தநிலையில், குடியுரிமைத்துறை அதிகாரிகள் நம் நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

ருமேனியா நாட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் நெகொய்டா (60). இவர்கடந்த மாதம் பிசினஸ் விசாவில் கோவைக்கு வந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த வேளையில் ஸ்டீபன் நெகொய்டா கோவை நகர வீதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.



கழுத்தில் தி.மு.க.வின் துண்டை அணிந்து கொண்டு சிங்காநல்லூர் பகுதியில் வீதி, வீதியாகவும் பேருந்துகளில் ஏறியும், வாகனங்களில் சென்றும் அவர் தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.

வெளிநாட்டுக்காரர் ஒருவர் கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைப் பலர் தங்களது செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதுபற்றி ஸ்டீபன் நெகொய்டா கூறுகையில், கோவையில் நான் பேருந்தில் பயணம் செய்தபோது பெண்களிடம் கண்டக்டர்கள் டிக்கெட் வாங்காததைக் கண்டு வியப்படைந்தேன்.

இதுகுறித்து விசாரித்த போது தமிழக அரசின் திட்டம் தெரியவந்தது. அதில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்தே தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே தொழில் முறை விசாவில் வந்த ஒருவர் ஒரு கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விசா விதிகளை மீறியது, அரசியல் மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஸ்டீபன் நெகொய்டாவுக்கு, சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக குடியுரிமைத்துறை சம்மன் அனுப்பியது.

அதன் பேரில் நேற்று முன்தினம் அவர் குடியுரிமைத்துறையில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பிரசாரம் மேற்கொண்டது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் விளக்கம் அளித்தார்.

இந்த விசாரணையின் அடிப்படையில் அவரது விசாவை ரத்து செய்து, உடனடியாக ருமேனியாவுக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விசா விதிகளை மீறுவது குற்றம். இனி, ஸ்டீபன் நெகொய்டா வெளிநாடுகளுக்குச் செல்லும் போது விசா விதிமுறைகளை மீறியவர் என்ற முத்திரை இருந்து கொண்டே இருக்கும். எளிதில் விசா கிடைக்காது.

வெளிநாட்டுப் பயணத்தின்போது, குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்காணிப்புக்கு உள்ளாவார். அவராகவே விசா வீதிகளை மீறியதற்காக தன் நாட்டிற்குத் திரும்பி விட வேண்டும். இல்லையென்றால் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...