திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது

திருப்பூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நகராட்சி பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12-இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 60.66-சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7-மணி முதல் துவங்கி மாலை 6-மணி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6-நகராட்சி மற்றும் 15-பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதற்காகத் திருப்பூர் மாவட்டத்தில் 1299-வாக்குச்சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் 55.40- சதவீதமும் நகராட்சி பகுதிகளில் 66.35-மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 75.34-சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 60.66-சதவிகித வாக்குப்பதிவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நகராட்சி பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12-இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.



Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...