கோவையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரிக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு..!

முன்னதாக, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்த வருவார்கள் என வாக்கு சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் பி.பி.கிட்டுடன் தயாராக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வரவில்லை.



கோவை: கோவையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.



நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. கோவையின் பல்வேறு இடங்களில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள், வாக்களிக்க முடியாததால் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்த வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு சாவடி மையத்தின் வாசல் மூடப்பட்டதால், வாக்கு செலுத்த வாக்கு சாவடிக்கு வெளியே காத்திருந்த பொது மக்களிடம் இது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்தும் நேரம் என்பதால் இதற்கு மேல் பொது மக்கள் வாக்கு செலுத்த அனுமதிக்க முடியாது என்ற தேர்தல் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

மேலும், காலையில் தாமதமாகவே வாக்கு சாவடியில் மக்களை வாக்களிக்க அனுமதித்ததாகவும் தற்போது தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரையும் தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.



மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு பதிவு செய்ய வருவார்கள் என்று வாக்கு சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் பி.பி.கிட்டுடன் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்த வாக்கு சாவடிகளுக்கு வரவில்லை.



இதனிடையே, வருகின்ற 22ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை அடுத்து வாக்கு சாவடிகளில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் பாதுகாப்புடன் வாகனங்களில் ஜி.சி.டி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...