கோவையில் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இருவர் மீது வழக்கு..!

ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்த சம்பளத்தை கேட்டதற்காக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர்.


கோவை: கோவையில் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தெற்கு மசி வீதி இப்பகுதியைச் சேர்ந்த கோபால் ரத்தினம் என்பவரின் மகன் ரத்தினவேல் (76). இவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

தொடர்ந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அந்த நிறுவனத்தில் சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை ரத்தினவேல் செக்யூரிட்டி நிறுவன அலுவலகத்திற்கு சென்று தனது சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த நிறுவனத்தின் உரிமையாளர் திலீப்குமார் ரத்தினவேலுவை நவ இந்தியா அருகிலுள்ள குதிரை பண்ணை அருகே வர சொல்லி இருக்கிறார். இதை அடுத்து ரத்தினவேல் அங்கு சென்றார். அங்கு வந்த திலிப்குமார் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வருவதாக கூறியிருக்கிறார்.

அப்போது, ரத்தினவேலுவுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திலிப் குமார் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ரத்தினவேலு மீது ஊற்றினார். அதேசமயத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் பீல்டு ஆபீஸராக பணிபுரியும் ஜான் என்பவர் தீக்குச்சியை கொளுத்தி ரத்தினவேலு மீது வீசினார். இதில் ரத்தினவேலு மீது தீ பற்றி எரிந்தது.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் ரத்தினவேலுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த பீளமேடு போலீசார் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் பீல்டு ஆபீஸர் ஜான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...