கோவையில் இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையிலும் ஊர்ந்து சென்று வாக்கினை பதிவு செய்த 75 வயது மூதாட்டி..!

மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: கோவை பீளமேடு பயணீர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 75 வயது மதிக்கத்தக்க பட்டியம்மாள் என்ற மூதாட்டி இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் ஊர்ந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் எனது 19வது வயதில் இருந்து ஓட்டுப் போட்டு வருகிறேன் என்றார். இதுவரை எந்த தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறியதே இல்லை. என்னால் பிறவியிலிருந்தே நடக்க முடியாத, வாய் பேச முடியாத நிலை இருந்த போதும், என் உடன் பிறந்த சகோதரிகள் துணையோடு நான் எனது வாக்கினை ஒவ்வொரு முறையும் தவறாமல் பதிவு செய்வேன். இது எனது ஜனநாயக கடமை என்றார்.

மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் பீளமேடு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...