கோவையில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு..! கூடுதல் நேரம் வேண்டி வேட்பாளர்கள் வாக்குவாதம்..!

காலையில் சற்று தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது சரியாக 5 மணிக்கு வாக்கு சாவடிகளை மூடுவது சரியல்ல என்று ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் இன்று 5 மணியுடன் முடிவடைந்ததால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

வாக்களிக்க முடியாததால் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்சி பிரமுகர்கள், வாக்காளர்களை உள்ளே விடும்படி காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், வாக்கு சாவடி கேட்டை காவல் துறையினர் பூட்டினர்.

வாக்கு சாவடி மையங்கள் மூடப்பட்டதால் வாசலில் வாக்காளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் காத்திருக்கும் காட்சிகளை காண முடிந்தது.



இந்த நிலையில், வார்டு 30 கணபதி பகுதியில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



காலையில் சற்று தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது சரியாக 5 மணிக்கு வாக்கு சாவடிகளை மூடுவது சரியல்ல என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...