இதுவரை 40.39 சதவீதம் வாக்குகளே பதிவு..! டிவிட்டரில் மாநகராட்சி மக்களை வாக்களிக்க செல்லுமாறு வேண்டுகோள்

வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், கோவை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர் அனைவரையும் வாக்களிக்க செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.


கோவை: கோவையில் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குபதிவு முடிவுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை 6,32,110 வாக்குகள், அதாவது 40.39 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இன்று, 3 மணி நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மொத்தமாக 46.52 சதவீதம் வாக்கு பதிவு பதிவாகியுள்ளது. அதில், கோவை மாநகராட்சி பகுதியில் 40.39சதவீதம், நகராட்சி பகுதிகளில் 53.80சதவீதம் பேரூராட்சிகளியில் 61.31சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், கோவை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர் அனைவரையும் வாக்களிக்க செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.



கோவை மாநகராட்சியில் வாக்குகள் குறைந்த அளவே பதிவாகியுள்ள நிலையில் ட்விட்டர் பக்கத்தில் கோவை மாநகராட்சி இந்த பதிவை வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...