திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் ஆய்வு..!

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வரும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 60 வார்டுகளுக்கும் 776 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்தி குமார் பாடி வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.



மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...