கோவையில் வாக்களிக்க வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காரை தி.மு.கவினர் வீடியோ எடுத்த விவகாரம்: பா.ஜ.க - தி.மு.கவினர் இடையே வாக்குவாதம்..!

அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு கலைந்து போகச் செய்தனர்.


கோவை: கோவையில் வாக்களிக்க வந்த பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ காரை தி.மு.க வினர் வீடியோ எடுத்த விவகாரத்தில் பா.ஜ.க - தி.மு.கவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள மலையாளிகள் சபதம் பள்ளியில் வாக்களிப்பதற்காக அவருடைய காரில் வந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த திமுகவினர் சிலர் அவருடைய கார் மற்றும் அவரையும் சேர்த்து வீடியோ எடுத்தனர். இதற்கு வானதி சீனிவாசன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை, அதனைத் தொடர்ந்து அவர் வாக்களித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில், அவருடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சபரிகிரீஸ் வீடியோ எடுத்த திமுகவின் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு கலைந்து போகச் செய்தனர்.



இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...