கோவை மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற வாக்காளர்கள்...!

எந்த வாக்குச்சாவடி என்பது கண்டறிய முடியாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர்.



கோவை: கோவை மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதால் ஒரு சில பகுதிகளில் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.



இந்நிலையில், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இளம் வாக்காளர் ஒருவருக்கு எந்த வாக்குச்சாவடி என்பது கண்டறிய முடியாமல் சிரமப்பட்டு வந்தார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அங்கு இருக்கும் அதிகாரிகளிடம் கேட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இணையதளத்தில் பார்க்க முயன்ற போதும் பார்க்க முடியவில்லை என தெரிவித்த அவர், இறுதி வரை எந்த வாக்குச் சாவடி என கண்டுபிடிக்க முடியாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.

இதேபோல, சித்தாபுதூர் பகுதியில் உள்ள வாக்காளர்களும் வாக்குச் சாவடி மையம் தெரியாமல் சிரமப்பட்டனர். வார்டு மறுவரை செய்யப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதால், ஒரு சில இடங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்கு மையம் எது என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...