பொள்ளாச்சியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு..!

காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் உள்ளன.

அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 523 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 253 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.



இன்று சரியாக ஏழு மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.



பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச்சாவடி மையங்களில் நுழைவாயில் முன்பு சானிடைசர் தெளித்து கைகளை சுத்தம் செய்தும், அதே போல, முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...