கோவையில் தள்ளாத வயதிலும் வீல் சேரில் வந்து வாக்களித்த 95 வயது முதியவர்..!

வாக்களித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கும் சில இளைஞர்கள் மத்தியில், ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று வந்த முதியவரை அனைவரும் பாராட்டினர்.


கோவை: கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் நடக்க முடியாத சூழலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அதிகாரிகள் வழங்கிய வீல் சேரில் சென்று வாக்களித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்த மக்கள் பலரும் இன்று அதிகாலை முதலே வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவையைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் நடக்கவே முடியாத சூழலிலும் சிரமப்பட்டு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. 95 வயது முதியவரான இவர் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து தனது கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த முதியவர் இன்று காலையிலேயே நல்லாம்பாளையம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார்.



நடக்கவே முடியாமல் வந்த அவருக்கு அதிகாரிகள் வீல் சேர் வழங்கினர். தொடர்ந்து அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினார்.

வாக்களித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கும் சில இளைஞர்கள் மத்தியில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற முனைப்போடு வந்து வாக்குப்பதிவு செய்த முதியவரை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...