திருப்பூரில் இன்று 440 வார்டு பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்..!

இதில், 20 பேர் போட்டியின்றி தேர்வாகிய நிலையில் மாவட்டம் முழுவதும் 420 வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.


திருப்பூர்: திருப்பூரில் இன்று 440 வார்டு பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில், உடுமலை, தாராபுரம் மற்றும் திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் சாமாளபுரம் பேரூராட்சி தொடங்கி, குன்னத்தூர், ருத்ராவதி, அவிநாசி, ஊத்துக்குளி, குமரலிங்கம், மடத்துக்குளம் மற்றும் தளி உட்பட மாவட்டத்தின் 15 பேரூராட்சிகள் என 440 வார்டு பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், உடுமலை நகராட்சியில் ஒருவரும், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 13 பேர், மடத்துக்குளம் பேரூராட்சியில் ஒருவர், கொளத்துபாளையம் பேரூராட்சியில் ஒருவர், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பேர், மூலனூர் மற்றும் முத்தூர் பேரூராட்சிகளில் தலா ஒருவர் என மேற்கண்ட பேரூராட்சிகளில் 19 பேரும் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 20 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் 420 வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 420 வார்டுகளில் மாநகராட்சியில் 494 பேரும், நகராட்சிகளில் 661 பேரும், பேரூராட்சிகளில் 765 பேரும் என மொத்தம் 1,920 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஆண் வாக்காளர்களுக்காக 163 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 163 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 450 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 776 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 224 பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இன்று நடைபெறும் தேர்தலில், ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 178 பேர், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 65 ஆயிரத்து 995 பேர் மற்றும் இதர வகுப்பினர் 199 பேர் என மொத்தமாக, 11 லட்சத்து 32 ஆயிரத்து 372 பேர் உள்ளனர்.

மாநகரில் 776 வாக்குச்சாவடிகளும், 6 நகராட்சிகளில் 279 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சியில் 244 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1299 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்களிக்க உள்ளனர். இதில் 1299 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதேபோல் 1299 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.

இதில் ஏதேனும் இயந்திரங்கள் பழுதானால் 20 சதவீதம் ரிசர்வ் வைக்கப்பட்டுள்ளவை பயன்படுத்தப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...