வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணம் விநியோகிக்கப்படுவதாக, கோவையில் திமுகவினரை கண்டித்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.,வினர் போராட்டம்

63 வது வார்டில் ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அருகிலேயே, திமுகவினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர் என்று அதிமுக மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி, அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு இடங்களில் பணம், ஹாட் பாக்ஸ், கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, கோவை மாநகராட்சி 63 வது வார்டு ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அருகிலேயே, திமுகவினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர் என்று அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



வாக்குச்சாவடி மையத்தின் அருகே உள்ள மண்டபத்தில் வைத்து பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பதை குற்றம்சாட்டி, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அதிமுக மற்றும் பாஜக முகவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும் உடனடியாக தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...