நமது ஜனநாயக கடமையான வாக்கு பதிவினை அனைவரும் கண்டிப்பாக நினைவேற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களை யார் செய்வார்கள் என்று ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
கோவை: நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கோவை சி.எம்.எஸ் பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நமது ஜனநாயக கடமையான வாக்கு பதிவினை அனைவரும் கண்டிப்பாக நினைவேற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களை யார் செய்வார்கள் என்று ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கோவையில் கடந்த சில நாட்களாகவே அத்துமீறல்கள் நடந்து வருகின்றது.
வீடு வீடாக பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது என்பது மிக மோசமான செயலாக உள்ளது. இத்தனை பிரச்சனைகளையும், தாண்டி மக்கள் நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது சவாலாக உள்ளது.
சில இடங்களில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் விரட்டப்பட்டுள்ளனர். காவல்துறையினரும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை", என்று பாஜக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.