கோவையில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க 'ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்' முதல்முறையாக அறிமுகம்

ஒரே இடத்திலிருந்து, 424 மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், அதை தேர்தல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் அளிக்கப்படும். மேலும், உடனடியாக அந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் "ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்", முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 424 பதற்றமான வாக்குச்சாவடிகளை ஒரே இடத்தில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் அமைக்கபடுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில், மாநகராட்சியில் 1290 வாக்குச்சாவடிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 2303 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், கோவை மாநகராட்சி பகுதியில் 169 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகளில் 112, பேரூராட்சிகளில் 143 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 424 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.



மேலும், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்முறையாக "ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்" அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்திலிருந்து, 424 மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், அதை தேர்தல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் அளிக்கப்படும். மேலும், உடனடியாக அந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...