கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜன் நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தற்போது கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்டத்தை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், கோவையில் நேர்மையாக தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...