விவசாயிகளின் நண்பர்கள் : ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள்


விவசாயிகளுக்கு உதவும் மண்புழு அவர்களின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் மண்புழு செய்யும் பணிகள் அளவிடற்கரியது. மண்புழு மட்டுமல்லாது, விவாயிகளுக்கு உதவும் ஒவ்வொரு உயிரினங்களும் அவர்களுக்குமட்டுமன்றி நமக்கும் நண்பர்கள் தான். 

அந்த வகையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், குறைந்த விலையில் தானியங்களையும் அதில் உள்ள கற்களையும் தனித்தனியே பிரித்தெடுக்கும் இயந்திரத்தை ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 



4-ம் ஆண்டு மெக்கானிக்கல் பாடப்பிரிவில் படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த இயந்திரம் தானியங்களில் உள்ள கற்களை மற்ற பழைய இயந்திரங்களை காட்டிலும் வேகமாக பிரித்தெடுக்கிறது. அதோடு, இதன் விலையும் மற்ற இயந்திரங்களை விட குறைவாக உள்ளது. தற்போது கல்லூரி ப்ராஜெக்ட்-க்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம்  சந்தைகளுக்கு வரும்போது, விவசாயிகள் மிக அதிக விலை கொடுத்து இயந்திரங்களை வாங்கும் நிலை இருக்காது. 

இந்த இயந்திரம் குறித்து அதன் தயாரிப்பாளர்களுள் ஒருவரான தனுஸ்வரதன் நம்மிடம் கூறியதாவது:-

இந்த இயந்திரத்தை எங்களது கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்-ஆக தயாரித்தோம். ‘டிஸ்டோனர்’ என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளோம். தானியங்களில் இருக்கும் கற்களை பிரிக்கும் விதமாக ‘டிஸ்டோனர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. என்னுடன் எனது வகுப்பை சேர்ந்த எட்வின், தனபால் மற்றும் தினேஷ்குமார் ஆகிய நால்வரும் ஒரு குழுவாக இணைந்து இந்த பணியை தொடங்கினோம். எங்கள் ஆசிரியர் கணேஷ்-ன் வழிகாட்டுதலின் பேரில்‘டிஸ்டோனர்’தயாரிக்க முடிவு செய்தோம். கடந்த மாதம் தான் இதற்கான வேலை தொடங்கியது. மற்ற நிறுவனங்களிடம் பணம் கொடுத்து இயந்திரங்களை தயாரித்து தர சொல்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. புதிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையும், அது விவசாயத்திற்கு பயன்படவேண்டும் என்ற எண்ணமுமே இந்த இயந்திரத்தை விரைவாக செய்து முடிக்க வழிவகுத்தது.



தானியங்களில் இருந்து கற்களை பிரிக்கும் இயந்திரங்கள் சந்தைகளில் கிடைக்கின்றது. அந்த இயந்திரங்களை பார்வையிட்டு, அதில் உள்ள குறைகளை பட்டியலிட்டோம். அதன்படி, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் சில மாறுதல்கள் செய்துள்ளோம்.  அதன்படி, ஆர்.பி.எம். என்று கூறப்படும் இயந்திரத்தின் வேகத்தை அதிகரித்துளோம். இதனால், குறைந்த நேரத்தில் அதிக தானியங்களை தூய்மையாக்க முடியும். மேலும், பழைய இயந்திரத்தின் எடை அதிகமாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும். இந்த இயந்திரம் அளவிலும், எடையிலும் சிறியதாக இருக்கும், அதே நேரத்தில் பழைய இயந்திரங்கள் செய்யும் வேலையை மிக விரைவாக செய்து முடிக்கும். 



பண்பாடு மாறாமல் தானியங்களை புடைக்கும் முறை தான் இங்கு கடைபிடிக்கப்படுகிறது. இயந்திரத்தின் அடிப்பாகத்தில் காற்றை உமிழும் ‘ப்ளோயர்’ பொருத்தப்பட்டுள்ளது. இயந்திரம் இயக்கப்படும் போது ‘ப்ளோயர்’ காற்றை மேல் நோக்கி உமிழும், அதோடு இயந்திரத்தின் மேற்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள தட்டு வலது, இடது என இருபுறங்களிலும் ஆடும். இதன்மூலம், இயந்திரத்தட்டில் எடை குறைவாக இருக்கும் தானியங்கள் காற்றின் வேகத்தால் மேல் தூக்கப்பட்டு, அதிர்வுகளின் மூலம் முன்புறமாக தள்ளி வடிகட்டப்படும். தானியங்களை விட எடை அதிகமாக இருக்கும் கற்கள் இயந்திரத்தின் பின்புறமாக சேகரிக்கப்படும். இதன்மூலம், ஒரு மணி நேரத்திற்குள் அரை டன் எடையுள்ள தானியங்களை பிரித்தெடுக்க முடியும். இந்த இயந்திரத்தை தயாரிக்க ரூ.42 ஆயிரம் மட்டும் செலவானது. 



‘டிஸ்டோனர்’ வெற்றிகரமாக செயல்படத் தொடங்கும் நேரத்தில் விலை குறைவான இயந்திரத்தை விவசாயிகளுக்கு வழங்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...