மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.02.2022 சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைந்துள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், பெரிய
நிறுவனங்களும் 19.02.2022 சனிக்கிழமை அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அனுசரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும் தேர்தல் நடைபெறும் நாளான (19.02.2022) சனிக்கிழமை அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அனுசரிக்க வேண்டும் என
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரித்துள்ளார்.