தென்னை மர சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க, இளநீர் கொடுத்து சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம்!!

கோவை மாநகராட்சியில், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில்,தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் கண்ணன் தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியில், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில்,தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் கண்ணன் தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் வேட்பாளர்கள் 778-பேர் போட்டியிடுகின்றனர்.



இதில் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில், தென்னை மரச்சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகக் கண்ணன் போட்டியிடுகிறார். இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை இதுவரை யாரும் செய்து தராததால், சுயேச்சையாகப் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை வெற்றி பெறச்செய்தால், இப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிப்படை வசதிகள் முதல் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணிகள் வரை, உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தனது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரித்தார்.



அப்போது, தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...