மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக வழங்கிய நிதியை 8-ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக வழங்கிய நிதியை 8-ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மசக்காளிப்பாளையம் பகுதியில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி பிரச்சாரத்தில் தெரிவித்தார்.


கோவை: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக வழங்கிய நிதியை 8-ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மசக்காளிப்பாளையம் பகுதியில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி பிரச்சாரத்தில்தெரிவித்தார்.

கோவை மசக்காளிப்பாளையம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் பாஜகவின் இறுதி பிரச்சாரம் நடைபெற்றது. இதில், பிரச்சார உரை ஆற்றிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இந்தத் தேர்தலில் முக்கியமான மூன்று கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.



இந்தியாவில் ஐம்பது ஆண்டு காலங்களாக இருந்த இந்திய அரசியலை மாற்றியவர் பிரதமர் மோடி. சாதாரண அரசியல் குடும்ப அரசியலைச் செய்து கொண்டிருந்த இந்தியாவை உடைத்துக் காட்டியது பிரதமர் என தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவைக்கு அளித்து 8-ஆண்டுகள் ஆகிறது என கூறிய அவர் கோவை ஸ்மார்ட் சிட்டியாக மாறவில்லை என தெரிவித்தார்.

கோவை ஒவ்வொரு நாளும் பின் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள காண்ட்ரேக்கடர்கள் மத்திய அரசின் நிதிகளை விழுங்கி விட்டனர். சிறுவாணி அணையின் நீர் மட்டமும் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். வளர்ச்சி என்கிற பெயரில் மேம்பாலங்கள் அமைத்து சாலைகளைப் பழுதாக்கி உள்ளதாகக் கூறினார்.

திமுகவினர் தரும் கொலுசு ஹைதராபாத்தில் வாங்கியது ஹாட்பாக்ஸ் டெல்லியில் வாங்கியதாக திமுகவினரே தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். நீட் தேர்வில் தேவையில்லாமல் ஒரு பூதத்தை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்தார். தற்போது லஞ்சம் என்பது பெருத்து போயுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், இவை எல்லாம் மாற வேண்டுமென்றால் பாஜக வெற்றி பெற வேண்டுமெனக் கூறினார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவுள்ள தேர்தல் நாளில் மக்கள் பாஜகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்வார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். கருமத்தம்பட்டியில் பாஜக வேட்பாளர் பரிசு பொருள் தந்தது குறுத்து கேள்வி எழுப்பிய போது தமிழகம் முழுவதும் திமுக கொலுசு ஹாட்பாக்ஸ் தந்து வருவதாகத் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...