முதலமை‌ச்ச‌ர் வீட்டு முன்பு போராடிய 33 மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

தஞ்சை மாவட்டம் மைகேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.


கோவை: சென்னையில், முதல்வர் வீட்டு முன் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் மைகேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர்கள், 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களை நள்ளிரவு வரை அங்கும் இங்கும் அலைக்கழித்துள்ளனர்.

இதற்கு பா.ஜ.க, சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தவும், உரிமைகளை கேட்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

அதன் அடிப்படையில்தான் மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். கைது செய்யப்பட்ட 33 பேரையும் போலீசார் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...