உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கு: 3 வது குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கோவை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உதகை அருகே உள்ள மாவனல்லா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 50 வயதுடைய காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி காயமடைந்த யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. ஆனால் பலத்த காயம் காரணமாக அன்றே யானை உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனையில் யானையின் காதுப் பகுதியில் பலத்த தீக்காயம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதுதொடர்பாக வனத்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், மாவநல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதியிலிருந்த சிலர் யானைக்குத் தீவைத்த காணொலி வலைத்தளங்களில் பரவியது.

இதில் ரிக்கி ராயன் என்பவரது விடுதி வழியாக வந்த யானையைத் துரத்த ரிக்கி ராயனின் சகோதரர் ரேமண்ட் டீன், இவர்களோடு பணியிலிருந்த பிரசாந்த் ஆகியோர் யானைக்குத் தீவைத்து வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்த வனத்துறையினர் அந்த விடுதிக்குச் சீல் வைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரேமண்ட் டீன் விடுதிப் பணியாளர் பிரசாந்த் ஆகியோரைக் கைதுசெய்தனர். இவர்கள் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ரிக்கிராயன் கடந்த ஓராண்டுக் காலமாகத் தலைமறைவாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் உதகை நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர் கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிமன்றத்தில் சரணடைந்த ரிக்கி ராயன் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...