கிணத்துக்கடவில் உள்ள வரசித்தி செல்வ விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள வரசித்தி செல்வ விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் உள்ளது.

இந்த திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் குடங்கள் வைத்து யாக பூஜை நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் தீர்த்த குடங்களை மேளதாளங்களுடன் கோபுரத்துக்குக் கொண்டுசென்று கோபுரத்தில் உள்ள கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து செல்வ விநாயகருக்குச் சிறப்பு அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...